புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்......
பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் புதிய கிளை நூலகம் திறப்பு
ஆவடி அருகே ரூ.38 லட்சத்தில் கோவில்பாதாகை ஏரி உபரிநீர் வடிகால் சீரமைப்புப் பணியை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ஆவடி அருகே கோவில்பதாகை ஏரி ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையிலும் நிறைந்து உபரிநீர் வடிகாலில் செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதிகளிலும் கோவில்பதாகை நெடுஞ்சாலையிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசரின் கவனத்திற்கு அந்தப் பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அவர் உபரிநீர் வடிகாலை ஆழப்படுத்தி சீரமைக்க ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, உபநீர் வடிகாலை ரூ 38.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை மேற்கண்ட பணியை அமைச்சர் சா.மு.நாசர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர், ஆவடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சேதமடைந்த கட்டடத்தில் இயங்கி வந்த ஆவடி கிளை நூலகத்தை, ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் உள்ள புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஆவடி மேயர் கு.உதயகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாநகரப் பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன், மாவட்ட நூலக அலுவலர் மு.கவிதா, ஆவடி மண்டலக் குழு தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், அமுதா சேகர், திமுக நிர்வாகிகள் சண்.பிரகாஷ், பொன்.விஜயன், வீ.சிங்காரம், பு.கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், தண்டுரை கோபி, குமார், மீனாட்சி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.