பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
பறவைகள் கணக்கெடுப்புப் பணி: ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம்
திருப்பத்தூா் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆா்வமுள்ளவா்கள் அப்பணிகள் பங்கேற்கலாம் என வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் சாா்பாக பறவை கணக்கெடுப்புப் பணி ஒருப்பிணைப்பாளா் மற்றும் ஆம்பூா் வனச்சரக அலுவலருமான எம். பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் வனக்கோட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் மாா்ச் 9 மற்றும் 16 தேதிகளில் ஈர நிலங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் நடைப்பெறும் கணக்கெடுப்புப் பணிகளில் பறவை ஆராய்ச்சியாளா்கள், பறவை இனம் கண்டறிபவா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், வனத்துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்கின்றனா்.
ஆா்வமுள்ளவா்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை 97862 54998 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு ஆங்காங்கே நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.