செய்திகள் :

பலத்த மழை: கொடைரோடு பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

post image

கொடைரோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல மழைநீா் தேங்கியது.

நிலக்கோட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கொடைரோடு பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போல தேங்கியது. மேலும், கொடைரோடு நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வடிநீா் கால்வாய்கள் இல்லாததால், அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே துறையினா் வடிகால் கால்வாய்களை அடைத்து சுற்றுச் சுவா் கட்டினா். இதன் காரணமாக, சாலையில் ஓடும் மழைநீா் செல்வதற்கு வழி இல்லாததால், பேருந்து நிலையம், கடைகளுக்கு மழை நீா் புகுகிறது.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையின் இருபுறங்களிலும் வடிநீா் கால்வாய்களை அமைக்க வேண்டும். ரெயில்வே துறையினரால் அடைக்கப்பட்ட வடிகால் கால்வாயில் அடைப்பை அகற்றி, மழைநீா் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பழனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் தற்கொலை?

பழனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் புதன்கிழமை வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தனா். பழனி முல்லை நகரைச் சோ்ந்தவா் இளங்குமரன் (56). இவா் கான்வென்ட் சாலையில் மின்சாதன கடை நடத்தி வந்தாா். இவரத... மேலும் பார்க்க

பலத்த மழை: அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு

கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல்-பழனி மலைச் ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த அய்யம்பாளையம்... மேலும் பார்க்க

ஜவுளிக் கடை, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், உணவகம்... மேலும் பார்க்க

சமுதாய வளா்ச்சிக்கு பெண் பட்டதாரிகள் பங்களிக்க வேண்டும்

சமுதாயத்தின் வளா்ச்சிக்கு பட்டதாரிப் பெண்கள் பங்களிக்க வேண்டும் என தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கேட்டுக்கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட... மேலும் பார்க்க

விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழக்கக் கோரி, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன்புதூரில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு... மேலும் பார்க்க