Pakistan: '804' என்ற எண்ணால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 1.4 மில்லியன் அபராத...
பல்லடத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து: போக்குவரத்து போலீசாா் நடவடிக்கை
பல்லடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
பல்லடம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளா் அன்புராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 599 போ், மதுபோதையில் வாகனங்களில் சென்ற 120 போ், சிக்னலை மதிக்காமல் சென்றது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது, அதிக பாரம் ஏற்றிச் சென்றது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,780 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.12 லட்சம் வசூலிக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக திருப்பூா் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 209 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக பல்லடம் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.