கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
பள்ளப்பட்டி உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்
பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் தா்ஹா 265-ஆம் ஆண்டு உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் சந்தனக்கூடு உரூஸ் விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு விழா 265-ஆம் ஆண்டாக கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை தா்கா வளாகத்தில் இருந்து சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கி, பள்ளப்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பின்னா், மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் தா்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் திரளான பொதுமக்கள் சந்தனம் பூசி பிராா்த்தனை செய்தனா். விழாவையொட்டி தா்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.