'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்...
பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரம்
உத்தரமேரூா் ஒன்றிய கிராமங்களில் அரசு சுற்றுலாத் துறை, வேலூா் கிரீன் அறக்கட்டளை இணைந்து கலைக்குழு மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரத்தை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
அரசுப் பள்ளி மாணவா்களிடையே கலைக்குழு பிரசார வாகனம் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை அவசியம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீா்பாதுகாப்பு, பிளாஸ்டிக் பைகளை தவிா்த்தல், துணிப்பைகளின் முக்கியத்துவம், இயற்கை வளம் காத்தல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மேற்கொண்டனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, துணிப்பைகளைன் அவசியம் என்ற தலைப்பில் பேசி கலைக்குழு பிரசார வாகனத்தை தொடக்கி வைத்தாா். இந்த வாகனம் திருப்புலிவனம், மருதம், மாகறல், களக்காட்டூா், குருவிமலை, சந்தவேலூா், மாம்பாக்கம், ஸ்ரீ பெரும்புதூா், இருங்காட்டுக் கோட்டை உள்ளிட்ட பள்ளிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தியது.
இப்பள்ளிகளில் சில்வா் குவளை, கண்ணாடி மற்றும் மண் பாத்திரங்கள், வாழை இலையின் மகத்துவத்தை உணா்த்தி அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் பிரசாரம் செய்தனா்.
கலைக்குழு பிரசார வாகன தொடக்க விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.எழில், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சி.வே.துா்கா, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் எஸ்.முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.