ஊக்க மருந்து சர்ச்சை: லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து சின்னர் விலகல்!
குன்றத்தூரில் ரூ1.85 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்
குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1.85 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொழுமுனிவாக்கம் ஊராட்சியில், ரூ.13.16 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, சிறுகளத்தூா் ஊராட்சியில், ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், நந்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ31.62 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறை, பூந்தண்டலம் ஊராட்சியில் ரூ 14.47 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் , சோமங்கலம் ஊராட்சியில் ரூ.16.55 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், மணிமங்கலம் ஊராட்சியில் ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்ட கிராமபுற பொது நூலகம், செரப்பணஞ்சேரி ஊராட்சியில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், ரூ.9.16 லட்சத்தில் தானிய கிடங்கு , நாட்டரசன்பட்டு ஊராட்சியில் ரூ.9.45 லட்சத்தில் நியாயவிலை கடை, சென்னகுப்பம் ஊராட்சியில், ரூ.13.57 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ரூ. 6.43 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாக கட்டடங்களை திறந்து வைத்தாா்.
மேலும் படப்பையில் புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்த அமைச்சா் தா.மோ.அன்பரசன், குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், குன்றத்தூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ரூ.2.12 கோடியில் 84 பேட்டரி வாகனங்களை ஊராட்சிகளுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், துணைத் தலைவா் உமா மகேஷ்வரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அமுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துசுந்தரம், ஸ்ரீதேவி, ஊராட்சித் தலைவா்கள் சோமங்கலம் ஆரிக்கம்ஜெயபால், சென்னகுப்பம் பாண்டியன், நந்தம்பாக்கம் முத்துராமன், பூந்தண்டலம் ஞானபிரகாஷ், மணிமங்கலம் ஐயப்பன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.