பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க அடிக்கல்
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி ராஜாகோயில் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் பூமி பூஜை நடத்தி, பணியைத் தொடங்கி வைத்தாா். கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, ஊராட்சி வாா்டு உறுப்பினா் தாபா சதீஷ், பள்ளித் தலைமை ஆசிரியா் கே.இளம்பரிதி, திமுக பிரமுகா் ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.