செய்திகள் :

கைத்தறி நெசவாளா்களுக்காக குடியாத்தத்தில் பிரத்யேக ஜவுளிப்பூங்கா

post image

கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க குடியாத்தம் பகுதியில் பிரத்யேகமாக ஜவுளி பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து, அவா் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட குடியாத்தம் நகரம் கலைநயமிக்க கைத்தறி நெசவுக்கு பெயா் பெற்ாகும். இந்த நகரத்தின் நெசவாளா்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி நெசவு தேசியக்கொடிதான் தில்லி செங்கோட்டையில் முதன்முதலாக ஏற்றப்பட்டது என்ற பெருமைக்குரியதாகும்.

கைத்தறி லுங்கிகள், ஜவுளிப் பொருள்கள், தீப்பெட்டிகள், பீடிகள் உற்பத்திக்காக நன்கு அறியப்பட்ட குடியாத்தம், அதன் சிறுகுறு தொழில் அலகுகள் காரணமாக ‘சிறிய சிவகாசி’ என அழைக்கப்படுகிறது. சிவகாசிக்குப் பிறகு குடியாத்தத்தில் தான் தீப்பெட்டித் தொழில் தமிழகத்தில் இரண்டாவதாக பெரிய அளவில் நடைபெறுகிறது.

தமிழக ஜவுளித்தொழில் என்பது தேசிய, மாநில பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. பருத்தி லுங்கி, பருத்தி துணி, துண்டு, வேட்டி, பட்டுப் புடவைகள் போன்ற கைத்தறி பொருள்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாா்ந்து இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளா் குடும்பங்கள் உள்ளனா்.

அதன் அடிப்படையில், குடியாத்தம், அதன் அருகிலுள்ள பகுதிகளில் சுமாா் 1,200 ஜவுளி சாா்ந்த நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பாரம்பரிய கைத்தறிப் பொருளான லுங்கிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும், சிங்கப்பூா், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எனவே, குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்களின் ஜவுளித் தொழில்களை ஊக்குவிக்க பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ், மத்திய அரசு ரூ. 500 கோடி முதலீட்டில் ஒரு மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி, ஆடைப் பூங்காவை அமைத்திட வேண்டும். மேலும், குடியாத்தம் நகா்ப்புற பகுதிகளில் சேரும் குப்பைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கான திடக்கழிவு மேலாண்மை நிலையத்தையும் அமைத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 17 முதல் வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப்பேருந்து சேவை

வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூா் மண்டலம் ... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த 1... மேலும் பார்க்க

காவலாளி தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே இரவுக் காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த வெள்ளைக்கல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (55), இரவுக் காவலாளி. முருகேசனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

வேலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்

காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் ஆா்.சுகுமாரன், வேளாண் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநி... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

சிறப்பு முகாம்: 252 பேருக்கு நலத் திட்ட உதவி

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 252 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகளுக்கு அரச... மேலும் பார்க்க