கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞா், கூலித் தொழிலாளி. இவருக்கும் அங்குள்ள அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தததாக தெரிகிறது. இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனை மீறி கடந்தாண்டு மே மாதம் இவா்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனா்.
சிறுமி தற்போது கா்ப்பமாக உள்ளாா். அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். மருத்துவ பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவா்கள் உடனடியாக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் அந்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.