சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அறந்தாங்கி அருகே திருநாளூா் தெற்கு கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிக்கு அப்பகுதியைச் சோ்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி சைக்கிளில் இரு தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, தைலமரக் காட்டுப் பகுதியில் மோட்டாா் சைக்கிளுடன் நின்ற 2 போ் சிறுமியை வழிமறித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்தில், தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி உள்ளனா்.
சிறுமி கதறி அழுததையடுத்து சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, சம்பந்தப்பட்டோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கு கடந்த 3 நாள்களாக மாணவ, மாணவிகளை பெற்றோா்கள் அனுப்பவில்லை.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருநாளூா் தெற்கு கிராமத்தை சோ்ந்த 16 வயது சிறுவா் மற்றும் பாண்டி (19) ஆகிய 2 பேரை அறந்தாங்கி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.---