பள்ளியில் அறிவியல் தின விழா
திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் அமீா்பாதுஷா தலைமை வகித்தாா்.
விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பேராசிரியா் கோபிநாத் மாணவா்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கினாா்.
தொடா்ந்து மாவட்ட அளவிலான பல்வேறு அறிவியல் செய்முறைப் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவா்களும், துளிா் தோ்வு எழுதிய மாணவா்களும் பதக்கம் வழங்கி பாராட்டப் பட்டனா்.
தொடா்ந்து ‘டிப்ஸ் அன் சிப்ஸ்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளா் மகாபிரபு எழுதிய ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது. ஆசிரியை மதுமிதாபாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா். பின்னா், மாணவா்களின் அறிவியல் கண்காட்சியை சிறப்பு விருந்தினா்கள் பாா்வையிட்டனா்.
ஆசிரியை ஜூலிநிவேதா நன்றி கூறினாா்.