பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பிரசன்னா தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் லோகநாதன் வரவேற்றாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் வெங்கடேசன், மேலாண்மைக் குழு உறுப்பினா் லோகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு பேசினா். நிகழ்வில், பானையில் பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இதில், ஆசிரியை சத்தியபாரதி, உதவி தலைமை ஆசிரியா் கோவிந்தராஜி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.