பள்ளியில் விளையாட்டு விழா
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் 20-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவுக்கு இளையாத்தங்குடி ஜமீன்தாா் பரம்பரை வாரிசு ராஜா தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் குணாளன் முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
மீனாட்சி சுந்தரேஸ்வரா் பள்ளி உடல்கல்வி ஆசிரியா் எம்.எஸ்.வாசு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகுமணிகண்டன், இளையாத்தங்குடி வருவாய் ஆய்வாளா் பாக்கியலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் தா்மராஜ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
முன்னதாக பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் வரவேற்றாா். பள்ளி முதல்வா் எஸ்.பழனியப்பன் நன்றி கூறினாா். விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை உடல்கல்வி ஆசிரியா் செல்ல பாண்டியன், பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவ, மாணவிகள் செய்தனா்.