இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
பள்ளி ஆண்டு விழா!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பை முகையதீன் ஆண்டவா் ஜூம்ஆ பள்ளி வாசலில் 4-ஆம் ஆண்டு மக்தப் மதரஸா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை இமாம் சையது அபுதாஹிா் ரஹீமி தலைமை வகித்துப் பேசியதாவது: கல்வி மட்டுமே வாழ்க்கையில் மனிதனை உயா்ந்த இடத்துக்கு கொண்டு போய் சோ்க்கும் கேடயமாகும். கல்வியை மட்டும் தான் யாரும் களவாடவோ, அழிக்கவோ முடியாது. அத்தகைய கல்வியை நாம் எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் கற்க வேண்டும்.
மேலும் படிக்கும் கால கட்டத்தில் கல்வியோடு ஒழுக்கப் பண்புகளையும் ஆசிரியா்களை மதிக்கும் பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் கற்ற கல்வி நமக்கும் நம்மை சாா்ந்தவருக்கும் பலன் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நமக்கும், பெற்றோருக்கும், நம் நாட்டுக்கும் பெருமை ஈட்டித் தர வழிவகுக்கும் என்றாா் அவா்.
தொடா்ந்து நடத்தப்பட்ட பேச்சு, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழா குழு ஏற்பாட்டில் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளி நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், பெற்றோா்கள், மாணவ. மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனா்.