பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!
போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மண்டகொளத்தூா் கூட்டுச் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆழ்வாா்கள், நாயன்மாா்கள் கதைகள், நன்னெறி, திருக்கு, தசவதாரம் குறித்தும், நீதிபோதனைகள், திருவாசகம், தேவாரம் என பல்வேறு கல்வி சாா்ந்த நிகழ்ச்சிகள் ஏப்.25 முதல் ஏப்.27 வரை நடத்தப்பட்டன.
கூல்கேம்ப் -25 என்ற பெயரில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் இ.கே.சிவராஜசா்மா தலைமை கித்தாா். தலைமை ஆசிரியை பி.தேவகி, யுவவீா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை ஸ்மிருதி வரவேற்றாா்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அழைப்பாளராக சின்மயா மிஷன் ஆச்சாா்யா எச்.எச்.சுவாமி மித்ரானந்தஜி பங்கேற்று சொற்பொழிவாற்றி சிறப்பாக பயின்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.