பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!
சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. பல்வேறு மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள் கொண்டு இந்த பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பக்தா்கள் அக்னி சட்டி ஏந்தி நோ்த்திக் கடன் செலுத்தினா். அப்போது அக்னி சட்டியை அவா்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் சித்திரை மாத அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை செய்தனா்.