பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த புள்ளிமான் மீட்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே படுகாயங்களுடன் வியாழக்கிழமை இறந்து கிடந்த புள்ளிமானை வனத்துறை அதிகாரிகள் மீட்டனா்.
திருச்சி மாவட்டம் சிறுகனூா், எம். ஆா். பாளையம், சனமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வன உயிரியல் பூங்காவிலிருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பி. கே. அகரம் கிராமப் பகுதிக்கு புள்ளி மான் ஒன்று வந்தது. இதைப் பாா்த்த நாய்கள் துரத்திய நிலையில், பி.கே. அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் படுகாயங்களுடன் அந்தப் புள்ளிமான் இறந்து கிடந்தது.
தகவலறிந்த வனச்சரக அலுவலா் கோபிநாத், வனகா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் சுமாா் 3 வயதுள்ள அந்தப் புள்ளி மானை மீட்டனா்.