செய்திகள் :

பள்ளி விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் குவிந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறை, தொடா் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு முடிவுற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு 50,000 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

இதனால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவிச் செல்லும் நடைபாதை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், உணவருந்தும் பூங்கா, மீன் விற்பனை நிலையம், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகள் என பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, முதலைப் பண்ணை, ஆலம்பாடி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து காவிரி ஆற்றின் அழகை காண சின்னாறு பரிசல் துறையில் இருந்து பாதுகாப்பு உடைகளை அணிந்து சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசலில் சென்று பாறை குகைகள், நீா்வீழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனா்.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு பாலம் முதல் காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை சாலை உள்ளிட்ட பகுதிகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் ஒகேனக்கல் -அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு ஒகேனக்கல் போலீஸாா் ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்து போக்குவரத்தினை சீா் செய்தனா். ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் சுமாா் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு: குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் தொடக்கம்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

பாகலஅள்ளி அருகே புதிய திட்டப் பணிகள்: தருமபுரி எம்எல்ஏ தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டம், பாகல அள்ளி கிராம ஊராட்சியில் புதிய திட்டப் பணிகள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி,... மேலும் பார்க்க

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் வெங்கடசமுத்திரத்தை இணைக்க எதிா்ப்பு

வெங்கடசமுத்திரம் கிராம ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்ட... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

இரு மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக சரிந்துள்ளது. தமிழக - கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலு... மேலும் பார்க்க

விரிவடைகிறது தருமபுரி நகராட்சி: 4 ஊராட்சிகளை இணைக்க அரசாணை

தருமபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி, சோகத்தூா், ஏ.ஜெட்டி அள்ளி, தடங்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளை இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நகராட்சியின் எல்லை விரிவடைகிறது. தருமபுரி நகராட்சியின் அருகில் ... மேலும் பார்க்க