செய்திகள் :

பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐஐடி!

post image

கான்கிரீட்டில் உணவுக் கழிவுகளைக் கலப்பதன் மூலம் கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கான்கிரீட் வலிமையை அதிகரிப்பது குறித்து ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து வந்தது. இந்த நிலையில், கான்கிரீட்டில் நோய்க்கிருமி அல்லாத பாக்டீரியாவைக் கலப்பதன் மூலம் அதன் கட்டுமான வலிமை இரட்டிப்பாவது ஆய்வில் தெரிய வந்தது.

உணவுக் கழிவுகள் அழுகும்போது, அதிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு, கான்கிரீட்டில் உள்ள கால்சியம் அயனிகளுடன் வினைபுரிந்து கால்சியம் கார்பனேட் படிகங்களை உருவாக்குகிறது. இந்தப் படிகங்கள் கான்கிரீட்டில் உள்ள துளைகள் மற்றும் விரிசல்களை நிரப்புவதுடன், எடையில் குறிப்பிடத்தக்க விளைவையும் ஏற்படுத்தாமல் கான்கிரீட்டை திடமாக்குகின்றன.

இதையும் படிக்க:2026 தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்! - விஜய்

அதுமட்டுமின்றி, துளைகள் மற்றும் விரிசல்கள் நிரப்பப்பட்டவுடன் பாக்டீரியா வளர்வதை நிறுத்திக் கொள்வதால், கட்டுமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது.

காலிஃபிளவர் தண்டு, உருளைக்கிழங்கு தோல், வெந்தயத்தின் தண்டு, ஆரஞ்சு பழத் தோல், அழுகிய பழக் கழிவுகள் முதலானவை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது.

இவையனைத்தும் ஈரப்பதமான நிலையில், தூளாக பதப்பட்டு, பின்னர் தண்ணீருடன் கலந்து ஒரு நிலையான திரவத்தை உருவாக்குகின்றன.

மகா கும்பமேளா கோலாகலமாக நிறைவு: 65 கோடி பேர் பங்கேற்பு!

பிரயாக்ராஜ் : நிகழாண்டின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா இன்று(பிப். 26) நிறைவடைந்தது.பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைபெற்று வ... மேலும் பார்க்க

தங்கம் இறக்குமதியில் சரிவு!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது.ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்தா... மேலும் பார்க்க

குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: மோப்ப நாய் உதவியை நாடும் மீட்புக் குழு!

தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க மோப்ப நாய்களைப் பயன்படுத்த மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.தெலங்கானாவின் நாகா்குர்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சி... மேலும் பார்க்க

அரசுப்பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் போராட்டம்!

புணே : மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளம்பெண் ஒருவர் புணேயில் ஆள்நடமாட்டம் மிகுந்து காணப்படும் ... மேலும் பார்க்க

ரஷியா செல்லும் பிரதமர் மோடி?

ரஷியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா, ரஷியாவின் மாஸ்கோ நகரி... மேலும் பார்க்க