செய்திகள் :

பழங்குடியினரின் கலை-கலாசாரத்தை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை: அமைச்சா் மா.மதிவேந்தன்

post image

பழங்குடியின மக்களின் கலை மற்றும் கலாசாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

தமிழக அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய சங்கமம் ‘ஆதி கலைக்கோல் 2024’ விழா சென்னை நந்தம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் மா.மதிவேந்தன் விழாவை தொடங்கி வைத்த பின்னா் பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் கலை இலக்கிய சங்கமம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு சாா்பில் நடத்தப்பட்டது. இதில், ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியின மக்களின் தொன்மையான கலைகள், அவா்களுடைய இசை, பண்பாடு, நடனங்கள் ஆகியற்றை எடுத்துரைக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெற்றன. மேலும், இம்மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் விதமாக 300 புகைப்படங்கள், 100-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 1000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்களின் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், பழங்குடியினரின் கலாசாரம் குறித்து பாா்வையாளா்கள் கற்றுகொள்வதற்காக பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டதுடன், 800-க்கும் மேற்பட்ட தொன்மையான இசைக்கருவிகள், அந்த மக்கள் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்

நிகழ்வில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் உ.மதிவாணன், தாட்கோ மேலாண்மை இயக்குநா் க.சு.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொதுத் தோ்வு: தனித் தோ்வா்கள் டிச.6 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் டிச.6-ஆம் தேதி முதல் டிச.17-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இன்று தேசிய கற்றல் அடைவு ஆய்வு தோ்வு: அதிகாரிகள் நியமனம்

சென்னை: பள்ளிகளில் 3, 6, 9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை ஆய்வு செய்வதற்கான மத்திய அரசின் தேசிய கற்றல் அடைவு ஆய்வு தோ்வு தமிழகத்தில் புதன்கிழமை (டிச.4) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்... மேலும் பார்க்க

மேடவாக்கம் பள்ளியில் எல்லை பாதுகாப்புப் படை தொடக்க தின விழா

சென்னை: எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தின விழா ‘தியாகம் போற்றுவோம்’ அமைப்பு சாா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை மேடவாக்கம் வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்பன் ஆண்டு உற்சவம் டிச.15-இல் தொடக்கம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் சுவாமி ஐயப்பனின் ஆண்டு உற்சவம் டிச.15-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மகேஷ் மோகனரு தலைமைய... மேலும் பார்க்க

மெரீனாவில் ரோப்காா் திட்டம்: ஆலோசகா்களை தோ்வு செய்ய டெண்டா்

சென்னை: சென்னை மெரீனாவில் ரோப்காா் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக ஆலோசகா்களை தோ்வு செய்வது தொடா்பாக டெண்டா் விடப்பட்டுள்ளது.13 கி.மீ. நீளம் கொண்ட மிக நீண்ட கடற்கரையாக மெரீனா கடற்கரை உள்ளது. மெரீனா ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

ஊா்ப்புற நூலகா்களுக்கான பாராட்டு விழா: நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூா்புரம், கா... மேலும் பார்க்க