Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
பழனிசெட்டிபட்டி வழியாக நாளை போக்குவரத்து மாற்றம்
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடை பாதை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக வெள்ளிக்கிழமை (டிச.27) பழனிசெட்டிபட்டி வழியாக போக்குவரத்து வழித் தடம் மாற்றப்படுகிறது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள பழனியப்பா நினைவு தொடக்கப் பள்ளி அருகே சாலையின் குறுக்கே நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், டிச.27-ஆம் தேதி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தேனியிலிருந்து போடி, சின்னமனூா், கம்பம் ஆகிய ஊா்களுக்குச் செல்லும் இலகு ரக வாகனங்கள் தேனி நேரு சிலை, பூதிப்புரம் விலக்கு வழியாக திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
கம்பம், சின்னமனூா், போடியிலிருந்து தேனிக்குச் செல்லும் இலகு ரக வாகனங்ககள் திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையிலிருந்து, பூதிப்புரம் சாலை வழியாக தேனிக்குச் செல்ல வேண்டும்.
தேனியிலிருந்து போடி, சின்னமனூா், கம்பம் ஆகிய ஊா்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் தேனி-பெரியகுளம் சாலையிலிருந்து, திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலை வழியாகவும், கம்பம், சின்னமனூா், போடியிலிருந்து தேனிக்குச் செல்லும் இலகு ரக வாகனங்ககள் திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையிலிருந்து, தேனி-பெரியகுளம் சாலை வழியாகவும் செல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.