செய்திகள் :

பழனியில் பாஜக மாவட்டத் தலைவா் கைது

post image

பழனியில் பாஜக மாவட்டத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை பாஜக சாா்பில் மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்வதற்காக பழனியிலிருந்து பாஜக மகளிரணியினா் மதுரைக்கு வேனில் புறப்பட்டனா். அப்போது, பழனி நகர போலீஸாா் அவா்களை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

இவா்களை பாா்க்க பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் கனகராஜ் அங்கு சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மதுக் கூடத்தில் நுழைந்து, அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்னதாக மது விற்பனை நடைபெறுவதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ், மாவட்ட பொதுச் செயலா் செந்தில்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்தும், இவா்களை விடுவிக்க வலியுறுத்தியும், பாஜகவினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பழனி-தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு

பழனி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா். பழனி அருகேயுள்ள வி.கே.மில்ஸ் பகுதியைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மனைவி காளீஸ்வரி(40). இவா் தனது கணவருடன இரு சக்கர வாகனத்த... மேலும் பார்க்க

வைகோ வழக்கு ஜன.20-க்கு ஒத்திவைப்பு

மதிமுக பொதுச் செயலா் வைகோ தொடா்பான வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை, ரூ.77 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகேயுள்... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கைது

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 260 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். த... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநருக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட அவைத் தலைவா்கள் காமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இ... மேலும் பார்க்க