Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி... எந்த விநாயகர்-என்ன பலன்?...
பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்
பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது.
பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் யோகேஸ்வரா் ஞானாம்பாள் திருக்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அடிவாரம் மவுனகிரி சுவாமிகள் கருவறையில் சிவபூஜையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.