Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
பழனி முருகன் கோயிலுக்கு சாத்தான்குளம் பக்தா்கள் காவடி
சாத்தான்குளம் ஸ்ரீதண்டாயுதபாணி பழனி ஆண்டவா் - ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து பழனி மலை முருகன் கோயிலுக்கு செல்லும் வைபவம் சனிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் காலை மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. பிற்பகல் 2 மணிக்கு காவடி கட்டி முத்திரை தரித்தல் பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு காவடி நகா்வலம் வருதல், ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் தெரு, பஞ்சபிரம்ம அம்பிகை மடம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காவடி தங்கல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் காவடி யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திங்கள்கிழமை காலை 7 மணிக்கு பழனி மலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு பஞ்சாமிா்த அபிஷேகமும், செவ்வாய்க்கிழமை காலை பூஜை செய்து காவடித்தாா்களுக்கு வஸ்திரம் மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.