செய்திகள் :

`பழிக்குப் பழியாக கொலை' - விடுமுறையில் ஊருக்கு வந்த சட்டக்கல்லூரி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்

post image
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்த நிலையில்  கடந்த 3  நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக சொந்த ஊரான சேரன்மகாதேவிக்கு வந்தார். இந்த நிலையில், காலையில்  வழக்கம் போல் வீட்டில் இருந்து பைக்கில் அவரது தந்தையின் நெல் வயலுக்குச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வயலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் மணிகண்டன்

சேரன்மகாதேவியில் உள்ள கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகில் வந்து கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான மாயாண்டி என்பவர் வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை, அவரது உறவினர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி  மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது  தெரியவந்தது. கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடராங்குளத்தில் சிவராமன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சேரன்மகாதேவி

இந்தக் கொலையில் மணிகண்டனின் நெருங்கிய உறவினர் ஒருவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிவராமனின் கொலைக்குப் பழிக்குப்பழியாக மணிகண்டனை, சிவராமனின் தாய்மாமா மாயாண்டி கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. தப்பி ஓடிய மாயாண்டியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவத்தால் சேரன்மாதேவி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்: சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; மாணவி உள்பட மூவர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

பதினொன்றாவது படிக்கும் தனது மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை எனத் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவ... மேலும் பார்க்க

ஏடிஎம்-ல் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பண மோசடி; முதியவர்களைக் குறிவைக்கும் குழு; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். 65 வயதான இவர், தனது மகளின் ஏ.டி.எம். கார்டுடன் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் ம... மேலும் பார்க்க

வனத்துறை கட்டுப்பாட்டுப் பகுதியில் கஞ்சா சாகுபடி; ரகசிய ஆய்வில் அதிர்ச்சி; அதிகாரிகளுக்குத் தொடர்பா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்ததையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் அம்மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.இந்த சூ... மேலும் பார்க்க

திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்; தந்தையை வெட்டிவிட்டு விபரீத முடிவெடுத்த தீயணைப்பு வீரர்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள மேலப்புனவாசல் பகுதியை சேர்ந்த தம்பதி சேகர் - செந்தமிழ்ச்செல்வி, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விக்னேஷ்(29), திருவையாறு தீயணைப்பு நிலையத... மேலும் பார்க்க

ம.பி: `52 கிலோ தங்கம், ரூ. 10 கோடி ரொக்கம்' - காட்டில் கைவிடப்பட்ட காரிலிருந்து மீட்ட அதிகாரிகள்

மத்தியப்பிரதேசத்தில் காட்டுக்குள் கைவிடப்பட்டிருந்த காரிலிருந்து 52 கிலோ தங்கம் மற்றும் ரூ. 10 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ரதிபாத் பகுதியில் உள்ள ம... மேலும் பார்க்க

நெல்லை: வீடு வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய நபர்; சிசிடிவி காட்சிபதிவு மூலம் கைது!

நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக துவைத்து காயப்போட்டிருந்த துணிகள் தொடர்ச்சியாக காணாமல் போய் வந்துள்ளது. அதிலும், குறிப்பாக பெண்களின்உள்ளாடைகள் மட்டும் காணாமல் போய்க்கொண்டிருந்தது. பெரும்... மேலும் பார்க்க