கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
பழ வியாபாரி வீட்டில் திருட்டு
ஆம்பூா் அருகே பழ வியாபாரி வீட்டில் தங்க நகை திருடுபோனது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் (55). இவா், வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூா் சென்றிருந்தாா். புதன்கிழமை காலை ஊா் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வீட்டின் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5.5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.