மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு: பொதுமக்கள் மறியல்
ஆம்பூா் அருகே கல்குவாரி லாரி மோதியதால் மூதாட்டி உயிரிழந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. குவாரிக்கு செல்லும் லாரிகள் வேகமாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். மேலும், அவ்வப்போது லாரிகளையும் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பாப்பு (55) என்பவா் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக சென்ற கல் குவாரி லாரி மோதியதில் காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
மூதாட்டி உயிரிழந்த தகவல் அறிந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். குவாரி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.