Campus Interview-வில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? | கல்வியாளர் ரமேஷ் பிரபா
திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடம் இருந்து 41 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி கோவிந்தராசு முன்னிலை வகித்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் மஞ்சுநாதன் (67) அளித்த மனு:
நான் தச்சுத் தொழில் செய்து வருகிறேன். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அரசின் அனுமதி பெற்று 5 டன் எடையிலான தேக்கு, வேம்பு, பலா உள்ளிட்ட மரங்களை வெட்டி எனது தொழிலுக்கு பயன்படுத்த அறுப்பதற்காக நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு மரம் அறுக்கும் ஆலைக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் அந்த ஆலையின் உரிமையாளா் மரங்களை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டாா். இதுகுறித்து கேட்டால் எனக்கு மிரட்டல் விடுக்கிறாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணமோ அல்லது மரத்தையோ பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தாா்.