செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

post image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளுக்கு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க : பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானிய திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை!

பாகிஸ்தான் நடிகரின் திரைப்படம் இந்தியாவில் திரையிடப்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானின் நடிப்பில் உருவானப் படமான ‘அபிர் குலால்’ வரும் மே.9 ஆம் தேதி முதல் இந்திய திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் தெலங்கானா காவல் துறை உயர் அதிக... மேலும் பார்க்க

'பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை' - பிரதமர் மோடி பேச்சு!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையைப் பெறுவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு ... மேலும் பார்க்க

5 பயங்கரவாதிகள், 3 இடங்கள், 10 நிமிட துப்பாக்கிச் சூடு! பஹல்காமில் நடந்தது என்ன?

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் எப்படி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதி 'மினி சுவிட்சர்லாந்து' ... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பினார் துணை அதிபர் வான்ஸ்!

இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாயகம் திரும்பியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக அந்நாட்டு துணை ... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் போராட்டம்!

பஹல்காம் தாக்குதலையடுத்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பக... மேலும் பார்க்க