இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா? கௌதம் கம்பீர...
பஹல்காம் தாக்குதல்: கடற்படை அதிகாரியின் குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினஸ் நர்வாலின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.
நர்வாலின் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தில்லியிலிருந்து ஹரியாணா மாநிலம் கர்னலுக்கு வந்தடைந்தார்.
அதன்பின்னர், கர்னலில் உள்ள நர்வாலின் இல்லத்தை அடைந்தார். காங்கிரஸ் தலைவர்களில் ரோஹ்தக் நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடாவும் உடனிருந்தனர்.
கடந்த ஏப்.22ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.