Republic Day: 76-வது குடியரசு தினம்; பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?
பாகிஸ்தான் காவல்துறையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறையில் உயிரிழந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த மீனவர் பாபுவை 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், சிறைக்காலம் முடிந்தும் சிறையிலேயே வைக்கப்பட்ட பாபு, கராச்சி சிறையில் இன்று உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாபு தவிர்த்து, 180 இந்திய மீனவர்கள் விடுவிப்பு பட்டியல் காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் பாபுவோடு சேர்த்து பாகிஸ்தான் சிறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாகவே மீனவர் விடுவிப்பு பிரச்னை இருந்து வருகிறது.
இதையும் படிக்க:உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?