பாங்காக்கிற்கு விரைவில் தனது சேவையைத் தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
புதுதில்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், டிசம்பர் 20 முதல் சூரத் மற்றும் புனேவிலிருந்து பாங்காக்கிற்கு விமான சேவையைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
டாடா குழும கேரியரான ஏர் இந்தியா, திமாபூர் (நாகாலாந்து) மற்றும் பாட்னா (பீகார்) ஆகிய இடங்களுக்கு தனது சேவையைத் விரைவில் தொடங்கும். இதன் மூலம் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மொத்தம் 51 நகரங்களை ஏர் இந்தியா இணைக்கும்.
பாங்காக்கிற்கான சேவை வரும் டிசம்பர் 20, 2024 முதல் தொடங்கும் வேளையில், சூரத் மற்றும் புனேவை தாய்லாந்தின் தலைநகருடன் இணைக்கும் நேரடி விமான சேவை இதில் அடங்கும்.
கூடுதலாக, திமாபூர் மற்றும் பாட்னாவுக்கு சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், விமான நிறுவனம் தனது உள்நாட்டு நெட்வொர்க்கை பலப்படுத்தும். திமாபூர் - குவஹாத்தி மற்றும் பாட்னா - பெங்களூரு - ஹைதராபாத் இடையே தினசரி நேரடி இணைப்பை ஏர் இந்தியா வழங்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஏற்ற, இறக்கத்திலும் மிதமான லாபத்துடன் முடிந்த பங்குச் சந்தை!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் தனது இருப்பை வேகமாக விரிவுபடுத்தி வருவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குனர் அலோக் சிங் தெரிவித்துள்ள வேளையில், ஏஐஎக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஏர் இந்தியா தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது.