செய்திகள் :

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

post image

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.

திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கேட்கப்பட்டது.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக - அதிமுக கூட்டணி

அதற்கு அவர் பேசியதாவது...

"கம்யூனிஸ்ட் கட்சியும், திருமாவளவனும் தினமும் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

'என்றைக்கு இந்தக் கூட்டணியிலிருந்து ஓடலாம்?' என்ற நிலையில் திருமாவளவன் இருக்கிறார்.

வைகோ அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழலில் இருக்கிறார்.

இதைப்பற்றியெல்லாம் கேட்காமல், எங்கள் கூட்டணியைப் பற்றி மட்டும் கேட்கிறீர்கள்.

அமித்ஷா சொன்னதே எங்களது வேதவாக்கு

எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது. அதனால், எங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள்.

அவர்களது கூட்டணி சுக்குநூறாக உடையப்போகிறது. எங்களுடைய கூட்டணியில் பலர் இணைந்து, இன்னமும் பலமாக உள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், 'கூட்டணி ஆட்சி அமையும்' என்று அமித்ஷா ஜி கூறியது எங்களது வேதவாக்கு" என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

TVK : 'அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் கூடாது!' - தொண்டர்களுக்கு விஜய்யின் 12 கட்டளைகள்!

சிவகங்கை காவல் மரணத்தைக் கண்டித்து தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள். இதில் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நில... மேலும் பார்க்க

Suki Sivam: தமிழர் பெருமை பரவுவதில் BJP அரசுக்கு விருப்பமில்லை | keezhadi

Suki sivam இந்த நேர்காணலில் மதத்தை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதை உடைத்துப் பேசுகிறார். கடவுளுக்கு மதம் தேவையில்லை மதத்துக்குதான் கடவுள் என ஆழமான கருத்துகளை அறிவுறுத்துகிறார். மேலும் பார்க்க

TVK, VCKவை கூட்டணிக்குள் கொண்டுவர BJPயை வெளியேற்றுமா ADMK? - Kalyanasundaram Interview

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற தலைப்பிலான தேர்தல் பிரச... மேலும் பார்க்க

'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா பேட்டி

'அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என்று எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி கொடுத்ததற்கு பின்னணி அமித் ஷாவின் ஒரு பேட்டி தான்.மத்திய உள்துறை அமைச்சரி அமித் ஷா 'தி நியூ இந்தியன்... மேலும் பார்க்க

"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" - கேரளாவில் அமித் ஷா

கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்... மேலும் பார்க்க