பாட் கம்மின்ஸுக்கு காயம்..! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
ஆஸி. கேப்டன் பாட கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதில் சிக்கல் என அதன் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
பாரடர் - கவாஸ்கர் தொடர் முழுவதும் கணுக்கால் காயத்தோடு விளையாடிய கம்மின்ஸ் 3-1 என இந்தியாவை வென்று 10 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை ஆஸி. பக்கம் கொண்டு வந்தார்.
தற்போது, கணுக்கால் காயத்திற்காக ஸ்கேன் எடுக்க சென்றுள்ளதாக ஆஸி. தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
பிப்.19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில் கேப்டன் கம்மின்ஸ் நிலைமை ஆஸி. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது:
இலங்கை தொடரில் விளையாடாமல் பாட் கம்மின்ஸ் சிறுது காலம் ஓய்வு எடுப்பார்.
சிறியதாக கணுக்கால் காயம் இருந்து வருகிறது. கம்மின்ஸின் ஸ்கேன் முடிவுகள் வந்தால்தான் நிச்சயமாக எதையும் கூற முடியும் என்றார்.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் பும்ரா இருக்கிறார்.
டெஸ்ட்டில் ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் பாட் கம்மின்ஸ் டாப் 10க்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.