செய்திகள் :

பாதுகாப்புப் படையினரின் கடுமையான நடவடிக்கை எதிரொலி: போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி

post image

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.

பல்வேறு வழக்குகளில் சிறைவைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் (72), நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) முதல் தீவிர போராட்டம் நடத்த தனது கட்சியினருக்கு கடந்த 13-ஆம் தேதி அழைப்பு விடுத்தாா்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் மக்கள் தங்கள் கட்சிக்கு அளித்த வெற்றி முறைகேடாக தட்டிப் பறிக்கப்பட்டதாகவும், தன்னைப் போல பலா் பொய்க் குற்றச்சாட்டின்பேரில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவா், முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைமையிலான சா்வாதிகார அரசுக்கு சாதகமாக அரசியல் சாசனத்தில் 26-ஆவது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினாா்.

இதற்கெல்லாம் எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் இஸ்லாமாபாதின் மையப் பகுதியில் அமைந்துள்ள, முக்கியத்துவம் வாய்ந்த டி-சதுக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த ‘இறுதி அழைப்பு’ விடுப்பதாக அவா் கூறினாா்.

அதையடுத்து, இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கண்டாபுா் ஆகியோரது தலைமையில் ஆயிரக்கணக்கான பிடிஐ கட்சியினா் அரசின் தடை மற்றும் பாதுகாப்புப் படையினரின் அரண்களை மீறி டி-சதுக்கத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

இதற்கிடையே, இஸ்லாமாபாதிலுள்ள ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது தாங்கள் வந்துகொண்டிருந்த வாகனத்தை போராட்டக்காரா்கள் ஏற்றினா். இதில், துணை ராணுவத்தைச் சோ்ந்த நான்கு பேரும் இரண்டு காவலா்களும் உயிரிழந்தனா்.

இது தவிர, போராட்டக்காரா்கள் சுட்டத்தில் படுகாயமடைந்த காவலா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

இந்தச் சூழலில், நாடாளுமன்றம், பிரதமா் அலுவலகம், அதிபா் மாளிகை, உச்சநீதிமன்றம் ஆகியவை அமைந்துள்ள டி-சதுக்கத்தில் பிடிஐ கட்சியினா் முற்றுகையிட்டுள்ளது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அரசு கூறியது. முன்னதாக, அந்தப் பகுதியை ராணுவத்தின் வசம் அரசு ஒப்படைத்தது. அங்கு பாதுகாப்புக்காக துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்க ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், டி-சதுக்கத்தில் கூடியிருந்தவா்களைக் கலைக்கும் நடவடிக்கையை போலீஸாா் மற்றும் பிற பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மேற்கொண்டனா். கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் அவா்கள் அங்கிருந்தவா்களைக் கலைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து புஷ்ரா பீபி, அலி அமீன் கண்டாபுா் ஆகியோா் உள்பட பிடிஐ கட்சியினா் அங்கிருந்து வெளியேறினா். முற்றுகைப் போராட்டமும் தற்காலிகமாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

‘ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழப்பு’: அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தங்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டதில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாக பிடிஐ கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அந்தக் கட்சி வெளியிட்ட பதிவில், ‘(பிரதமா்) ஷாபாஸ் ஷெரீஃப் - (அதிபா்) ஆசிஃப் அலி சா்தாரி - (ராணுவ தலைமைத் தளபதி) ஆசிம் முனீா் ஆகியோா் கூட்டணியில் நடந்துவரும் பாசிச அரசு, டி-சதுக்கத்தில் போராட்டம் நடத்தியவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. முடிந்தவரை எத்தனை பேரைக் கொல்ல முடியுமோ, அத்தனை பேரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அதைடுத்து, இந்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கானவா்களைப் படுகொலை செய்து இந்தப் போராட்டத்தை நிறுத்தியதன் மூலம் இதில் வெற்றி பெற்றுவிட்டதாக அரசு கருதிக்கொள்ளக்கூடாது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போா்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா். லெபனான் போா் நிறுத்த ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது- ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்

‘வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடா்வதும் ஹிந்து சமூக தலைவா்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிற... மேலும் பார்க்க

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளா்- டிரம்ப் நியமனம்

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அறிவியலாளா் ஜெய் பட்டாச்சாா்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவிப்பு ... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபா் மீது வழக்கு

பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக அந்த நாட்டுத் துணை அதிபா் சாரா டுடோ்த்தே மீது போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு ந... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போா் நிறுத்த ஒப்பந்தம்: அமெரிக்கா மத்தியஸ்தம்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், 13 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே நடைபெற்று வந்த தீவிர மோதல் முடிவுக்கு ... மேலும் பார்க்க

புயல் சின்னம்: இலங்கையில் கனமழை! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. புதன்க... மேலும் பார்க்க