செய்திகள் :

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரூ.3.40 கோடியில் மேலும் ஒரு புல்லட் புரூஃப் கார் வாங்கிய சல்மான் கான்!

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். அந்த அபூர்வ வகை மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் டெல்லியை சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறான். அதோடு கடந்த ஆண்டு மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்கு சென்றபோது கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவங்களை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் தனது பாதுகாப்பை தீவிரப்படுத்திக்கொண்டுள்ளார். மும்பை போலீஸாரும் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சல்மான் கான் தனது வீட்டு பால்கனிக்கு கூட குண்டு துளைக்காத கண்ணாடி மாட்டி இருக்கிறார். அதோடு சல்மான் கான் வெளியில் செல்லும்போது குண்டு துளைக்காத காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. சல்மான் கான் சொந்தமாக பாதுகாவலர்களையும் வைத்திருக்கிறார். சல்மான் கான் தனது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக புதிதாக குண்டு துளைக்காத கார் ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். Mercedes-Maybach GLS 600  என்ற அக்காரின் விலை ரூ.3.40 கோடியாகும். மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இக்கார் தானியங்கி கியர் பாக்ஸ் கொண்டது ஆகும்.

கிரிக்கெட் அணியை வாங்கிய சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் கார் மட்டுமல்லாது சொந்தமாக கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கி இருக்கிறார். ஐ.பி.எல் போன்று ISPL எனப்படும் indian street premier leagu என்ற புதிய கிரிக்கெட் பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி அணியை சல்மான் கான் வாங்கி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கர் தலைமையில் இந்த ஐ.எஸ்.பி.எல் அணிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் பால் டி10 போட்டிகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் இப்போட்டிகள் நடத்தப்பட்டுவிட்டது. அடிமட்டத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கதில் இந்த ஐ.எஸ்.பி.எல் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து அகமதாபாத்திற்கும் ஒரு அணி அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று ஐ.எஸ்.பி.எல் நிர்வாக கமிட்டி உறுப்பினர் அசிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூர் ஆகியோர் இணைந்து கொல்கத்தா அணியை வாங்கி இருக்கின்றனர். இதே போன்று ஹ்ரித்திக் ரோஷன் பெங்களூரு அணியையும், அமிதாப் பச்சன் மும்பை அணியையும் வாங்கி இருக்கின்றனர். நடிகர் சூர்யா சென்னை லயன்ஸ் அணியையும், ராம் சரண் ஐதராபாத் அணியையும், அக்‌ஷய் குமார் ஸ்ரீநகர் அணியையும் விலைக்கு வாங்கி இருக்கின்றனர்.

புதிய கிரிக்கெட் அணி வாங்கி இருப்பது குறித்து சல்மான் கான் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ''இந்தியாவின் ஒவ்வொரு தெருவிலும் எதிரொலிக்கும் ஒரு இதயத்துடிப்பு கிரிக்கெட். அந்த ஆற்றல் மைதானத்தை அடையும் போது, ​​ஐஎஸ்பிஎல் போன்ற லீக்குகள் பிறக்கின்றன. நான் எப்போதும் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறேன். இந்த தனித்துவமான லீக் இந்தியாவில் அடிமட்ட கிரிக்கெட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், திறமையான வீரர்களுக்கு ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதால் ஐஎஸ்பிஎல்-லில் சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

AR Rahman: "ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார்" - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி!

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான லெஜண்டரி இந்தி பாடகியான அனுராதா பாவுத்வாலுடன் இரண்டு பாடல்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார். “Kissa Hum Likhenge” (காதல் கடிதம் தீட்டவே மெட்டு) மற்றும் “Pa Jaye Kismat Se Tum Humk... மேலும் பார்க்க

Amir khan: "60 வயதிலும் ஓர் இணையைக் கண்டடைய உதவியது இதுதான்" - மனம் திறந்த ஆமிர் கான்

கடந்த மார்ச் மாதம் நடந்த பிறந்தநாள் விழாவின்போது, தனது கேர்ள் ஃபிரண்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஆமிர் கான்.60 வயதிலும் ஒரு காதலைக் கண்டடைய தனது மனநல சிகிச்சைகள் ... மேலும் பார்க்க

Cyber Crime: அமிதாப் பச்சனின் விழிப்புணர்வு வாய்ஸ் மெசேஜ்; நெட்டிசன்களின் எதிர்ப்பால் நீக்கம்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இது த... மேலும் பார்க்க

ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? - வனத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். இப்பங்களா மிகவும் பழமையானது ஆகும். எனவே எந்த பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும் மாநகராட்சியிடம் ஒப்புதல் பெறவேண்ட... மேலும் பார்க்க

Sitaare Zameen Par Review: உள்ளத்தைத் தொடும் கவிதை; நெகிழ வைக்கும் ஃபீல் குட் டிராமா!

கூடைப்பந்து பயிற்சியாளரான குல்ஷனுக்கு (ஆமிர் கான்) முன்கோபமும் ஈகோவும் அடிக்கடி எட்டிப்பார்க்கும் மனோபாவம். ஒரு பிரச்னையில் தன்னுடைய சீனியர் கோச்சை அவர் அடித்துவிட, கூடவே அன்று இரவே குடித்துவிட்டு ஒரு... மேலும் பார்க்க