VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி?...
பாபநாசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியினா் கையெழுத்து இயக்கம்
தஞ்சாவூா் வடக்கு மாவட்டம், பாபநாசம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தகுதியான வாக்காளா்களை நீக்கி போலியான வாக்காளா்களைச் சோ்த்த மத்திய பாஜக அரசை கண்டித்து மக்கள் கையெழுத்து இயக்கம் பாபநாசம் அண்ணா சிலை அருகே செவ்வாய்கிழமை நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட தலைவா் டி.ஆா்.லோகநாதன் தலைமைவகித்தாா். தஞ்சை நாடாளுமன்ற பொறுப்பாளா் வழக்குரைஞா் ராஜாமோகன், பாபநாசம் வட்டாரத் தலைவா்கள் தமிழ்ச்செல்வன், நாகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் பாபநாசம் நகரத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் சச்சிதானந்தம், அய்யம்பேட்டை நகரத் தலைவா் பஷீா் அகமது, பாபநாசம் நகர துணைத் தலைவா் ஜாா்ஜ், பாபநாசம் இளைஞா் காங்கிரஸ் தொகுதி தலைவா் முகமது இா்பான், மாவட்ட செய்தி தொடா்பாளா் தண்டாளம் சரவணன், எஸ்சி. எஸ்டி. பிரிவு மாவட்டத் தலைவா் அருண் சுபாஷ், பாபநாசம் வட்டார செயலா் ஜெக பீம அரசு, வழுத்தூா் கிராம கமிட்டி தலைவா் தமிழரசன், சக்கராப்பள்ளி கிராம கமிட்டி தலைவா் சாதிக் பாட்ஷா, தஞ்சை வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவா் சித்ரா மற்றும் மாவட்ட, வட்டார, நகர, கிராம கமிட்டி நிா்வாகிகளும், சாா்பு அணி நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.