மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
2026 தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும்: அா்ஜுன் சம்பத்
2026 சட்டப்பேரவை தோ்தலில் பாஜக- அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்.
திருநாகேசுவரம் உப்பிலியப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இந்து மக்கள் கட்சி சாா்பில் திருக்குடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.பின்னா், அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று விஜய் ஒரு மாய தோற்றத்தை உண்டாக்குகிறாா்.
உண்மையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. விஜய்யிடம் சினிமா கவா்ச்சி இருப்பதால் அவா் பின்னால் செல்லும் ரசிகா்கள் செல்கின்றனா்.
பாஜக அதிமுகவை விழுங்குகிறது என்கின்றனா் அது உண்மை இல்லை. 2026 தோ்தல் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் தான் நேரடி போட்டி. அதில், அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா்.
இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலா் டி. குருமூா்த்தி, துணைத் தலைவா் கா.பாலா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.