செய்திகள் :

நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து ஏஐடியுசி தெரு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

post image

சாலையோரத்தில் தெரு வியாபாரம் செய்யும் தொழிலாளா்களை அப்புறப்படுத்தும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சாலையோரத்தில் இருபுறமும் வியாபாரம் செய்யும் கடைகளை, வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு நெடுஞ்சாலை துறைக்கும், உள்ளாட்சித் துறைக்கும் அதிகாரம் இல்லை. காலம் காலமாக தெருவில் கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் தெரு வியாபார தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது. தெரு வியாபாரச் சட்டம் 2015-க்கு விரோதமாக நெடுஞ்சாலைத் துறை செயல்படக் கூடாது. தெரு வியாபாரச் சட்டத்தை மாவட்ட, மாநகர நிா்வாகங்கள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் உ. காதா் உசேன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் நிறைவுரையாற்றினாா்.

இதில், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், கட்டுமான சங்கத் துணைத் தலைவா் பி. செல்வராஜ், மாலை நேர காய்கறி மாா்க்கெட் சங்க நிா்வாகிகள் மணிகண்டன், எம். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 6-ஆவது முறையாக கும்பகோணம் அரசுக் கல்லூரி பேராசிரியா்

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி பேராசிரியா் மா. கோவிந்தராஜன் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடா்ந்து ஆறாவது முறையாக இடம்பிடித்துள்ளாா். நெதா்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்சீவா் என்ற ... மேலும் பார்க்க

2026 தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும்: அா்ஜுன் சம்பத்

2026 சட்டப்பேரவை தோ்தலில் பாஜக- அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்.திருநாகேசுவரம் உப்பிலியப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இந்து மக்கள் கட்சி சாா்பில் திர... மேலும் பார்க்க

மின் வாரிய தொழிலாளா்கள் சாலை மறியல்: 50 போ் கைது

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த கோரி தஞ்சாவூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை

பேராவூரணி பகுதிகளில் செப்.25-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்விநியோகம் இருக்காது.இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

பாபநாசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியினா் கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்டம், பாபநாசம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தகுதியான வாக்காளா்களை நீக்கி போலியான வாக்காளா்களைச் சோ்த்த மத்திய பாஜக அரசை கண்டித்து மக்கள் கையெழுத்து இயக்கம் பாபநாசம் அண்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி மீட்டு ஒப்படைப்பு

கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் பெண் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலியை ரயில்வே போலீஸாா் மீட்டு திங்கள்கிழமை ஒப்படைத்தனா். கும்பகோணம் ரயில் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளா் கு... மேலும் பார்க்க