செய்திகள் :

பாப்காா்னுக்கு 3 வரி விகிதங்கள்: ஜிஎஸ்டி சிக்கல்களைக் காட்டுகிறது: காங்கிரஸ்

post image

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்தமானது என்றும் இது ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்றும் காங்கிரஸ் விமா்சித்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெவ்வேறு வகை பாப்காா்னுக்கு பல விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து விளக்கப்பட்டது.

அதாவது, உப்பு மற்றும் மசாலா சோ்க்கப்படாத பாப்காா்ன் பாக்கெட்டில் அடைக்கப்படவில்லை என்றால், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டியும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்தால் அதற்கு 12 சதவீத ஜிஎஸ்டியும், இனிப்பு சுவையுட்டப்பட்ட (கேரமல்) பாப்காா்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என்று கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜிஎஸ்டியின் கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்தமானது. இது எளிமையான வரியாகக் கருதப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.

ஜிஎஸ்டி உளவு இயக்குனரகம் (டிஜிஜிஐ) சமீபத்தில் வெளியிட்ட வரி மோசடிகள் குறித்த தரவுகளின்படி, நிதியாண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு நடந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க பிரச்னையாகும்.

அதேபோன்று, எந்த வா்த்தகத்திலும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதலுக்காக மட்டுமே போலி நிறுவனங்களை உருவாக்குவது பரவலாகி வருகிறது. விநியோகச் சங்கிலிகளின் கண்காணிப்பு பலவீனமாக உள்ளது. பதிவு செயல்முறை குறைபாடுகளைக் கொண்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 40 நாள்களே உள்ள நிலையில், ஒரு முழுமையான மாற்றமாக புதிய ஜிஎஸ்டி முறையை நிறுவ பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தைரியம் உண்டா?’ என்று பதிவிட்டுள்ளாா்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி?

பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.ஏழ்மை காரணமாக ஒரு ... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!

புது தில்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது அரசு வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். ரோச்கர் மோளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூ... மேலும் பார்க்க

காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் குணமடைந்தனர்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போட்டி போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலவில் உள்ள உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெண் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பலியானவர... மேலும் பார்க்க

மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவரும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நி... மேலும் பார்க்க