செய்திகள் :

பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை... முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!' – மருத்துவர் ராமதாஸ்

post image

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மருத்துவர் ராமதாஸ், ``அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, ``அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்.

பொதுக்குழு மோதலுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துக் கொண்ட அன்புமணி, ராமதாஸ்

களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்” என்று ஆவேசமானார் அன்புமணி. அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், ``யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது." என்றார்.

அதையடுத்து சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார் அன்புமணி. பொதுக்குழு கூட்ட மேடையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸும், அன்புமணியும் கருத்து மோதலில் ஈடுபட்ட நிகழ்வு அக்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதையடுத்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் விளைவாக, கடந்த 2024 டிசம்பர் 29-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி. அதன்பிறகு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, ``கட்சியின் வளர்ச்சி, தேர்தல் திட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து மருத்துவர் ஐயாவிடம் விவாதித்தோம். பொதுக்குழுவில் நேற்று நடந்தது எங்கள் கட்சியின் உட்கட்சிப் பிரச்னை. எங்கள் கட்சிப் பிரச்னை குறித்து நாங்கள் பேசிக் கொள்கிறோம். பா.ம.க ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், அதில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அது குறித்து யாரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அன்புமணி, முகுந்தன்

அதையடுத்து பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``எங்களுக்கு எல்லாமே, எப்போதுமே ஐயா ஐயாதான்” என்று கூறினாரே தவிர, பொதுக்குழுவில் நடந்தது குறித்தோ, முகுந்தனின் நியமனம் குறித்தோ எதையும் பேசவில்லை. அதனால் முகுந்தனின் நியமனம் நீடிக்குமா, அல்லது அதில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்குள் குழப்பம் நீடித்தது. பனையூரில் இருக்கும் தனி அலுவலகம் வந்து என்னை சந்திக்கலாம் என்று அன்புமணி அறிவித்ததால், எந்தப் பக்கம் செல்வது என்று தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்த சூழலில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``பா.ம.க பொதுக்குழுவில் நடைபெற்றது எங்கள் உள்கட்சி விவகாரம். பா.ம.க இளைஞரணி தலைவர் முகுந்தன்தான். அதை பொதுக்குழுவில் அறிவித்ததுடன், அதற்கான கடிதத்தையும் அவரிடம் வழங்கி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அன்புமணியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரிடம் பேசி அது சரி செய்யப்பட்டு விட்டது" என்று கூறியிருக்கிறார்.

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன நடக்கிறது அங்கே?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ... மேலும் பார்க்க

ஆளுநர் R N Ravi Vs DMK மீண்டும் மோதல், TN Assembly-ல் நடந்தது என்ன? | Imperfect show | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - வந்தார்... சென்றார் ஸ்பூஃப்.* - TN சட்டமன்றம்: "யார் அது சார்?" சட்டையில் அச்சிடப்பட்ட மேற்கோள், அதிமுகவுடன்?* - ஆளுநர் உரை: ஆளுநர் உரை நிகழ்த்தாமல் பேரவைக்கு வந்து வ... மேலும் பார்க்க

`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கரு... மேலும் பார்க்க

`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது...' - செல்லூர் ராஜூ விமர்சனம்

"கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்..." என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.கே.பாலகிருஷ்ணன்மதுரை புதுவிளாங்குடி பகுதிய... மேலும் பார்க்க