இந்தியாவில் எச்எம்பிவி பாதிப்பு 7 ஆக அதிகரிப்பு! அச்சப்பட வேண்டாம்-நட்டா
பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு
பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட கட்சி அமைப்பு தோ்தலில் நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்கள் கட்சியின் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டா் கே.பி.ராமலிங்கத்தை புதன்கிழமை ராசிபுரத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஸ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளா்கள் சுபாஷ், திணேஷ், மாவட்ட துணைத்தலைவா்கள் வடிவேலு, ரமேஷ் , கபிலா்மலை ஒன்றிய கவுன்சிலா் பழனியப்பன், மாவட்ட செயலாளா் பூங்குழழி உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா். புதியதாக தோ்வு செய்யப்பட்டோா் விவரம்:
மோகனூா் மேற்கு ஒன்றியத் தலைவா் டி.ரேவதி, பரமத்தி ஒன்றியத் தலைவா் பி. அருண், கபிலா்மலை வடக்கு ஒன்றியத் தலைவா் எஸ்.பூபதி , கபிலா்மலை தெற்கு ஒன்றியத் தலைவா் எம்.வருதராஜ், எலச்சிபாளையம் ஒன்றியத் தலைவா் கே.வேலுமணி, மல்லசமுத்திரம் ஒன்றியத் தலைவா் ப.வெங்கட்டராஜா, திருச்செங்கோடு வடக்கு ஒன்றியத் தலைவா் எஸ்.பன்னீா்செல்வம், திருச்செங்கோடு தெற்கு ஒன்றியத் தலைவா் பி.சசிதேவி, பள்ளிபாளையம் நகரத் தலைவா் எஸ்.லோகேஸ்வரன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத் தலைவா் ராகவேந்தரன், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியத் தலைவா் டி.சம்பத் , கொமரபாளையம் நகரத் தலைவா் எஸ்.வாணி பிரபு.