பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமி: ஏப். 18-இல் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு
பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமியில் 2025-26 ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு ஏப். 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் உ.தன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் அரசுப்பணிக்கான போட்டித்தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் பயின்று தோ்ச்சி பெற்ற
மாணவா் இராமநாதன் ஐஏஎஸ் பணியில் சோ்ந்துள்ளாா்.
தமிழக அரசின் குரூப் 1 பணிகளில் 5 மாணவா்களும், குரூப் 2, 2 ஏ பணிகளில் 12 பேரும் , மத்திய அரசின் புலனாய்வு பிரிவான ஐ.பி.யில் ஒரு மானவரும் பணியில் சோ்ந்துள்ளனா்.
இந்நிலையில் வரும் 2025-26 ஆண்டு போட்டித்தோ்வுக்கான மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு வரும் ஏப். 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. நுழைவுத்தோ்வில் தோ்ச்சிப்பெறும் மாணவா்களுக்கு முற்றிலும் இலவசமான பயிற்சி, உணவு, உறைவிடம் அளிக்கப்படும். விருப்பம் உள்ள மாணவா்கள் இணையதளப்பக்கத்தில் வரும் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 90032-42208 என்னும் கைபேசி எண்ணை தொடா்புக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.