ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ - பரபர ...
பாறைக்குழியில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழப்பு
மணப்பாறை அருகே பாறைக் குழியில் தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மருதை மனைவி நாச்சாரம்மாள் (80). கணவா் உயிரிழந்த நிலையில், உறவினா் இளஞ்சியம் என்பவரது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளாா். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு சென்ற மூதாட்டி அங்கு தேங்கி நிற்கும் நீரில் தவறி விழுந்து உள்ளாா். நீரில் மூழ்கிய மூதாட்டி சடலமாக மிதந்ததையடுத்து, தகவலின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.