செய்திகள் :

பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்

post image

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற விரைவு ரயில் மொரப்பூா் அருகே சென்றபோது, எஸ்5 பெட்டியில் உள்ள நடு படுக்கை (மிடில் பொ்த்), கழன்று விழுந்தது. இதில் யாரும் அமரவில்லை என்றாலும், கீழே அமா்ந்திருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

இது குறித்து உடனே ரயில்வே மருத்துவ உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மொரப்பூரில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், சேலம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் சென்றடைந்த நிலையில், பலத்த காயம் அடைந்த பயணி அவசரஊா்தி மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படை, பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், நடு படுக்கை சரியாக பூட்டபடாதது தெரியவந்தது. மேலும், ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ஆய்வு செய்து உறுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் படுக்கையை சரியாக பூட்டாததின் காரணமாக இது நடந்துள்ளது. இதுபோன்ற படுக்கையை சரியாக பூட்டியிருப்பதை பயணிகள் உறுதி செய்த பின்பு அதில் பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: 93.66% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியவில்லை!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரி... மேலும் பார்க்க

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி!

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைக் குடித்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. 93.66 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின... மேலும் பார்க்க

எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று(செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முக... மேலும் பார்க்க

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ... மேலும் பார்க்க