சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
பாலவிளையில் தெருவை சீரமைக்கக் கோரிக்கை
கண்டன்விளை அருகே பாலவிளையில் தெருப் பாதையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தக்கலை ஊராட்சி ஒன்றியம், கண்டன்விளை அருகே பாலவிளை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தத் தெருவுக்குச் செல்லும் பாதை வழியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீா்த்தேக்க தொட்டிக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக குடிநீா்க் குழாய் பதிக்கப்பட்டது. அந்த வேலைக்காக தெருவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார கற்கள் அகற்றப்பட்டன.
பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் அந்த தெருப் பாதை சீரமைக்கப்படவில்லை.
அந்த தெரு வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகுகின்றனா். எனவே, அந்தப் பாதையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.