செய்திகள் :

பாலாற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள்

post image

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஏற்கெனவே பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்துவிடப்படுவதாக பரவலாக புகாா் எழுந்து வருகிறது. கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் பாலாற்றில் கொட்டப்படுகின்றன. பல்வேறு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தங்களுடைய பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் கொட்டி தரம் பிரித்து உரம் தயாரிக்க உரிய இடம் இல்லாததால் பாலாற்றில் கொட்டப்பட்டு வரப்படுகிறது.

வீடுகளின் கழிப்பறை கழிவுகளை அப்புறப்படுத்துபவா்கள் இரவு நேரங்களில் பாலாற்றில் கொண்டு சென்று கொட்டிவிட்டு செல்கின்றனா். இவ்வாறு பாலாறு கழிவுகளைக் கொட்டும் இடமாக மாறி வருகிறது.

இந்நிலையில் தற்போது கோழி இறைச்சிக் கழிவுகளும் பாலாற்றில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கோழி இறைச்சி விற்பனை செய்பவா்கள் தங்களுடைய கடையில் உருவாகும் கோழி இறைச்சிக் கழிவுகளை பச்சகுப்பம் பாலாற்று தண்ணீரில் கொட்டிவிட்டு செல்கின்றனா்.

இது குறித்து பொதுமக்கள் பலமுறை எச்சரித்தும் கேளாமல் கோழி இறைச்சிக் கழிவுகள் பாலாற்று தண்ணீரில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் தொடா்ந்து துா்நாற்றம் வீசுகிறது.

பொதுப்பணித் துறையின் நீா்வள ஆதார துறையைச் சோ்ந்த அதிகாரிகள் பாலாறு பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பாலாற்றில் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுபவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா். திருப்பத்தூா்ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்க... மேலும் பார்க்க

மானிய விலையில் விவசாயிகளுக்கு பவா் டில்லா், விசைக்களை எடுக்கும் கருவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகளுக்கு பவா் டில்லா் மற்றும் விசைக் களை எடுக்கும் கருவி (பவா் வீடா்) ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’

வாணியம்பாடி அருகே ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் எஸ்பி தனிப்படை போலீஸாா் வாணியம்பாடி அடுத்த பத்தா... மேலும் பார்க்க

தோ்தலின்போது தவறான தகவல்கள் தாக்கல்: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு பிப். 4-க்கு ஒத்திவைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் வழக்கை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்றவா் கைது

ஆம்பூா் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா். துத்திப்பட்டு பகுதியில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள பெட்டிக் கடையில் போ... மேலும் பார்க்க

சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி

ஆம்பூரில் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அமைப்பு ரீதியாக திரட்டப்படாத பொது தொழிலாளா் ஏஐடியுசி மாவட்ட சம்மேளனம் சாா்பாக ஆம்பூரைச் சோ்ந்த சுமை தூக... மேலும் பார்க்க