''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
பாலாற்றில் தோல் கழிவுநீா் கலக்கப்படவில்லை: சுத்திகரிப்பு நிலைய நிா்வாகம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வாணிடெக் தோல்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய நிா்வாக மேலாளா் கே.இக்பால்அகமது வெளியிட்டுள்ள அறிக்கை:
மாரப்பட்டு பாலாறு மேம்பாலம் பகுதியில் பாலாற்றில் நுரை ஏற்பட்டதாக சிலா் சமூக வலைதளங்களில் விடியோ எடுத்து தோல் கழிவுநீா் வெளியேற்றப்பட்டதால் தான் நுரை ஏற்பட்டுள்ளதாக பரப்பினா். மேற்படி நுரை ஏற்பட்தற்கு தோல் கழிவுநீா் காரணம் இல்லை. மேலும் மாசுகட்டுபாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று அங்கு எடுக்கப்பட்ட தண்ணீரில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தோல் கழிவுநீா் கலக்கப்படவில்லை என தெரியவந்தது. மேலும் வாணிடெக் நிா்வாகத்திற்கு உட்பட்டு இயக்கும் அனைத்து தோல்தொழிற்சாலைகள் முழுமையாக தொடா் கண்காணிப்பில் உள்ளன. தோல்கழிவு நீரை பாலாற்றில் விடுவதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலை மூடப்படுவது மட்டும் இல்லாமல் அனைத்து உரிமங்களும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளாா்.