செய்திகள் :

பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?

post image

உலக குத்துச்சண்டையின் புதிய அமைப்பு போட்டியாளர்களுக்கு பாலினம் கண்டறியும் பிசிஆர் எனும் புதிய சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

18 வயதைக் கடந்த அனைத்து போட்டியாளர்களும் இந்தப் பரிசோதனையை செய்தபிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான இமேன் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்.

இவர் உண்மையில் பெண்தானா என்ற குற்றச்சாட்டு எழுந்து, அதற்காக உலகம் முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் பெற்றார்.

மகளிருக்கு பிரச்னை, புதிய அமைப்பு உருவாக்கம்

இமான் கெலிஃப் போலவே தைபே வீராங்கனைக்கும் இந்தப் பிரச்னைகள் எழுந்தன.

அடுத்த மாதம் நெதர்லாந்தில் நடைபெறவிருக்கும் ஐந்தோவன் பாக்ஸ் கோப்பையில் கலந்துகொள்ள வேண்டுமானால் புதிய சோதனையில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அனைத்து போட்டியாளர்களின் பாலினம், வயது, எடை ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் பரிசோதித்து போட்டியில் பங்கேற்க வேண்டுமென்பதே முக்கிய குறிகோள் என உலக குத்துச்சண்டை அமைப்பு தெரிவித்துள்ளது.

20ஆம் நூற்றாண்டில் குரோமோசோம் சோதனை வழக்காமானதுதான். ஆனால், 1990-இல் இது டிஎஸ்டியை சரியாக கணிக்க முடியாததால் கைவிடப்பட்டது.

சில விளையாட்டு அமைப்புகள் ஹார்மோனை வைத்து பாலினத்தை உறுதி செய்கிறது. ஆனால், சிலருக்கு இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருந்தால் தவறான முடிவுக்கும் வழிவகுக்கும்.

பிசிஆர் சோதனை

ஐபிஏ (சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு)க்குப் பதிலாக உலக குத்துச்சண்டை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்புக்கு போட்டியாளர்களுக்கு பாலினத்தை உறுதிசெய்யும் தரமான சோதனையை தெரிவிக்கும் அழுத்தம் ஏற்பட்டது.

தற்போது, இந்தப் பிரச்னைகளுக்காக உலக குத்துச்சண்டை என்ற அமைப்பு பிசிஆர் சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மூலக்கூற்று உயிரியலில் பாலிமரேசு தொடர்வினையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.

இந்த பிசிஆர் சோதனையில் வாய் வழியாகவோ அல்லது உமிழ்நீர் அல்லது ரத்தத்தைப் பயன்படுத்தியோ எளிதாக எடுக்கலாம்.

மகளிர் பிரிவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஆண் தன்மையுள்ள குரோமோசோம் இருக்கிறதா என முதல்கட்ட சோதனையில் பரிசோதிக்கப்படும்.

பின்னர், மரபணு சோதனை, உடற்கூறியல் சோதனை, ஹார்மோன் சோதனை என தனிப்பட்ட சிறப்பு பிரிவு மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் எனவும் அதில் ஆட்சேபனை இருந்தால் மறுவிசாரணைக்கு வாய்ப்பும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஓடிடியில் லால் சலாம்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.லால் சலாம் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.அறிமுக ... மேலும் பார்க்க

ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!

பென்ஸ் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி இணைந்தது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகானக நடிக்கும் படத்தி... மேலும் பார்க்க

மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பிறந்தநாளில்... காதலைச் சொன்ன ஆர்த்தி சுபாஷ்!

மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பவன் ரவீந்திராவின் பிறந்தநாளில் தனது காதலைக் கூறியுள்ளார் நடிகை ஆர்த்தி சுபாஷ்.யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். இதனைத் தொடர்ந்து, சன் தொல... மேலும் பார்க்க

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தக் லைஃப் மேக்கிங் விடியோ!

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்துள்ளதால் தக் லைஃப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில்... மேலும் பார்க்க

வடிவேலு - ஃபகத் ஃபாசில் கூட்டணியில் மாரீசன் டீசர்!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாரீசன் படத்தின் டீசர் வெளியானது.மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக... மேலும் பார்க்க